Department of Higher Education:அரசு கல்லூரிகளில் வைஃபை இணைய சேவை வசதி ஏற்படுத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்த இருபதாம் நூற்றாண்டில் இணைய வழி கற்றல் என்பது உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக உள்ள நடைமுறையாக உள்ளது. அதாவது ஒரு நபர் கையில் ஸ்மார்ட்போன் உடன் இணைய வசதி இருந்தால் மட்டும் போது அவருக்கு தேவையான ஒரு செயல்பாடு தொடர்பாக அல்லது தேவையான கல்வி அறிவினை பெற்றுக் கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், கல்வியாளர்கள், புத்தகங்கள் என அனைத்து அவர்களின் தேவை எதுவோ அது பற்றிய செய்தி இணைய தளத்தில் நாம் அறிந்து கொள்ள முடியும். மேலும் மடிக்கணினி இணைய சேவை இருந்தால் போது நம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்துக் கொள்ளவும் முடியும். இது போன்ற மனிதனின் இன்றியமையாத தேவைகளில் (internet) இணையதளம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலும் மாணவர்களின் கல்வி மற்றும் நிறுவனங்களின் பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழக உயர்கல்வித் துறை அரசு கல்லூரிகளில் அன்லிமிடெட் இன்டர்நெட் வைஃபை வசதியை மாணவர்களின் கல்விக்காக இணையசேவை வழங்க முடிவு செய்துள்ளது.
இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். அதன்படி 150 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆப்டிகல் ஃபைபர் கனெக்ஷன் மற்றும் 7 அரசு பொறியியல் கல்லூரிகள், 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இணைய வசதி ஏற்படுத்த முடியும் செய்துள்ளது.
மேலும் 100 mbps வேகத்தில் தடையற்ற இணைய சேவையை வழங்க உள்ளது. இதனை மாணவர்கள் மொபைல் போன் மற்றும் லேப்டாப் களில் லாகின் ஐடி மூலம் இணைய சேவை இணைக்க முடியும். மேலும் தேவைக்கேற்ப இணைய சேவையை அதிகரிக்க முடியும்.