இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!

Photo of author

By Pavithra

இந்திய தேசமா?அல்லது இந்தி தேசமா? கட்சிப் பிரமுகர்கள் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டு இயற்கை மருத்துவர்களை யோகா பயிற்சியின் போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைப்பின் செயலர் ராஜேஷ் அவர்களின் மீது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இதனை எதிர்த்து தமிழகத்தின் கட்சி பிரமுகர்களான,
மு க ஸ்டாலின்,அன்புமணி ராமதாஸ்,கனிமொழி, வைகோ,
கமல்ஹாசன் உள்ளிட்டோரும்,கவிஞர் வைரமுத்தும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு மொழி வெறி தலைக்கேறி இருப்பது வெட்கக்கேடு என்றும்,இதனை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது,மக்களின் மீது இந்தி திணிப்பு எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்றும், அநாகரீகமாக நடந்து கொண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு உச்சகட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான சாட்சி இதுதான் ஆயுஷ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது இந்திய தேசமா? அல்லது இந்தி தேசமா? ஆயுஷ் செயலர் மீது தயவு தாட்சண்யின்றி நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷின் இந்த செயலானது மத்திய அரசின் இந்தித் திணிப்பு கொள்கையை அப்படியே வெளிப்படுத்துகின்றது என்று கனிமொழி அவர்கள் கூறியுள்ளார்.

யோகா பயிற்சி இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்கும் பொதுவானதா என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.