
BJP MDMK: இந்தியாவிலேயே மிக பெரிய கட்சியாக அறியப்படும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் தவித்து வருகிறது. ஜெயலலிதா காலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருந்தது. பின்னர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி முறிந்து விட்டது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பிறகு பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்தார்.
இந்த கூட்டணியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக- பாஜக சுமுகமான முறையில் கூட்டணியை அமைத்துள்ளது. மத்திய அரசில் தன்னுடைய பலத்தை வலிமையாக நிரூபித்திருக்கும் பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் இருப்பதை பெரிய அவமானமாக கருதுகிறது. பாஜக இந்துத்துவத்தை மையமாக வைத்து செயல்படுவதால் அவர்களால் தமிழகத்தினுள் வர முடியவில்லை. அதனால் தமிழகத்தில் மிக பெரிய கட்சியாக அறியப்படும் திராவிட கட்சியான அதிமுகயுடன் கூட்டணி வைத்து வென்று விடலாம் என்று நினைக்கிறது.
ஆனால் இதனை பலரும் எதிர்த்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் வைகோ பாஜக குறித்து கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் நுழைந்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். மேலும் பெரியார் சிலையை எங்கு எப்போது உடைக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு வாருங்கள், உங்கள் கை துண்டாக வெட்டப்படும் என்று தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.