விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!

0
211
VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today
VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today

விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!

சில நாட்களுக்கு முன்பு மத சார்புடைய ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக உள்ளவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சை பேச்சை பதிவு செய்திருந்தார். இது இந்து மத உணர்வாளர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருமாவளவனின் மத கலவரத்தை தூண்டும் வகையிலான இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. இவரது இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அவரை கைது செய்ய வலியுறுத்தி பல இடங்களில் காவல் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்பினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கேயம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மனு அளித்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களிலும், கட்சி கூட்டங்கள் மூலம் பொது இடங்களிலும், தொடர்ந்து மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருவதாக இந்த புகார் மனுவில் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியான திருமாவளவன் மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அதனால் அவரது எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும்,மேலும் அவருடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

தனக்கு கிடைத்த பதவி மூலமாக அவர் சார்ந்த தொகுதி மக்களுக்கு எதையும் செய்யாமல் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது அவரது கட்சியினரிடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பில் பல இந்து அமைப்பினர் காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இது பற்றிய செய்திகளுக்கு: கீழுள்ள செய்தியையும் பாருங்கள்

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleகமல் விழாவில் அஜித் வராதது ஏன்? புதிய தகவல்
Next articleதிருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை