சொந்த மகனாலேயே மானம் போச்சு! அவமானத்தில் துடிக்கும் திருச்சி சிவா!

Photo of author

By Sakthi

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கின்ற திமுக ஹிந்து எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக தொடக்கம் முதலே செயல்பட்டு வருகிறது.

தமிழக கல்வி முறையை பொறுத்த வரையில் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே தொடக்கம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் எந்த மொழியாக இருந்தாலும் மாநில மொழியுடன் சேர்த்து ஆங்கிலம், ஹிந்தி என்று மும்மொழி கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் மத்திய அரசின் இந்த நடைமுறையை தற்போது அரசியலாக்கி வருகிறார்கள். மத்திய அரசு கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே மும்மொழி கொள்கை தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் எதுவும் பேசாமல் இருந்து விட்டு தற்போது பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது என்பதை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது.

சரி ஹிந்தி எதிர்ப்பு கொள்கையில் தீவிரமாக இருந்து வரும் திமுகவில் இருக்கின்ற முக்கிய பிரமுகர்கள் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்களா என்று சிந்தித்தால் அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் திமுகவின் முக்கிய புள்ளிகள் பலர் ஹிந்தியை சரளமாக பேசுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். திமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற தயாநிதிமாறன் உள்ளிட்ட பலர் இந்தி மொழியை நன்றாகவே பேசுகிறார்கள்.

இதற்கு நடுவே தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது அந்த சம்பவம் திமுகவின் இந்திய எதிர்ப்பு கொள்கையை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

அதாவது திமுகவைச் சார்ந்தவர்கள் இந்தி எதிர்ப்புக் கொள்கையில் மக்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ள திமுகவின் எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா இதற்கு ஆதாரமாக தன்னுடைய தந்தையின் வீடியோவையே வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதாவது திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சிவாவின் மகன் சூர்யா நியமனம் செய்யப்பட்டார்.

அதாவது திமுகவில் 15 வருட காலமாக உழைத்த தனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை திமுக சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது என்பது போன்ற எண்ணற்ற விமர்சனங்களையும் அவர் முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது திமுக இந்தி திணிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்ற சூழ்நிலையில், தன்னுடைய தந்தையின் வீடியோ ஒன்றை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர்களின் கொள்கை சான்று மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை. உங்கள் மொழி அரசியல் இனி தமிழகத்தில் ஈடுபடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வீடியோவில் தனக்கு இந்தி தெரியாது என்று திருச்சி சிவா தெரிவிக்கும் வீடியோவையும், ஹிந்தியில் அவர் பாட்டு பாடுவது போன்ற வீடியோவையும் சூர்யா இணைத்து பதிவிட்டுள்ளார்.