ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மக்கள்!

Photo of author

By Sakthi

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை என அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

பொதுவாக ஒரு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோவில் நிகழ்ச்சியோ அல்லது உலகப்புகழ்பெற்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுமானால் அந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கீழக்கரை ஏர்வாடி கிராமத்தில் ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்த்தான் செய்யது இப்ரஹிம் சாஹீப் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதியான இன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்றும், அதனை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜூலை மாதம் 2ம் தேதி என்று சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.