பொடுகு தொல்லையா? கவலையே படாதீங்க! இதை முயற்சி பண்ணி பாருங்க!

Photo of author

By Kowsalya

பொடுகு தொல்லையா? கவலையே படாதீங்க! இதை முயற்சி பண்ணி பாருங்க!

Kowsalya

Updated on:

பொடுகு தொல்லை என்பது அனைவரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.பலரும் புலம்பும் இந்த பொடுகுத் தொல்லையை இரண்டு வாரத்திலேயே போக்கக்கூடிய நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:

1. ஒரு கப் தயிர்

2. வெந்தயம் பொடித்தது.

3. ஆலிவ் ஆயில்

4. லெமன் ஜூஸ்.

தயாரிப்பு முறை:

  • முதலில் ஒரு கப் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தயிர் விட்டு கலந்து கொள்ளவும்.
  • அதனுடன்பொடித்து வைத்த வெந்தயத்தை சேர்க்கவும்.
  • அந்தக் கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஊற்றவும்.
  • இத்துடன்ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸை கலக்கவும்.
  • அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
  • கலந்த கலவையை தலையில் நன்கு தேய்த்து விடவும்.
  • அரை மணி நேரம் கழித்து தலையை நன்கு கழுவி விடவும்.

மிகவும் எளிதான இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுங்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் இந்த முறை மிகவும் எளிதானது. கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள் உங்களது பொடுகை விரட்டுங்கள்.