சேலம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து!! உயிரை பறித்த தீபாவளி.. 9 மாத குழந்தை பலி!!

Photo of author

By Jeevitha

Salem: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சேலம் திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை பலியானது.

தீபாவளி பண்டிகை காரணமாக வெளியூரில் பணிபுரியும் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் வாழப்பாடியில் நடந்த சம்பவம் அனைவரது மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு (அழகாபுரம்) காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய குடும்பம்.

அந்த கார் தரை பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதிய விபத்தில் 9 மாத பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் தீபக் அழகப்பன் மற்றும் தெய்வானை இருவரும் படுகாயம். அப்போது வாழப்பாடி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பெற்றோர் தீபக் அழகப்பன் மற்றும் தெய்வானை இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து இவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7 மணி அளவில் வாழப்பாடி வரும் போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.