14 வயது சிறுமியை திருமணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

Photo of author

By Sakthi

பாகிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சலாஹுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை பெண்களின் நலனுக்காக பணி செய்து வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசாரிடம் அளித்திருக்கிறது . விசாரணை செய்ததில் அந்த சிறுமி பள்ளியில் படித்து வருகின்றார் என்று தெரியவந்திருக்கிறது.

2006 ஆம் வருடத்தின் பிறந்த அந்த சிறுமி பாகிஸ்தான் சட்டப்படி திருமண வயதை இன்னமும் அடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் சட்டவிரோதமாக அந்த எம்பி அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த சிறுமியின் தகப்பனாரிடம் விசாரணை செய்த போது அவர் இந்த விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். அதனால் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.