மாநில அரசின் மீது குறை கூறுவதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமான பதில்

0
149

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்கக்கூடிய வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த சூழ்நிலையில், அது குறித்து அறிக்கையை வெளியிட்டிருக்கின்ற மாநில பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை அதிகரித்து வந்ததாகவும், வரியை குறைக்க வேண்டும் என தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், தற்சமயம் மத்திய அரசு அதனை கவனித்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததாகவும், இதன் காரணமாக, 1 வருடத்திற்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், அவர் கூறியிருக்கிறார்.

பலமுறை வரியை அதிகரித்து மத்திய அரசு மாநில அரசுகளிடம் எந்தவிதமான கருத்தையும் கேட்கவில்லை என தெரிவித்திருக்கிறார் பழனிவேல் தியாகராஜன். ஆகவே உயர்த்தப்பட்ட வரியில் ஒரு பகுதியை மட்டுமே மத்திய அரசு குறைத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தற்போது வரை குறைக்க பெற்றாலும் மத்திய அரசின் 2014 ஆம் ஆண்டின் வரியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் 45 காசுகள் அதிகரித்திருப்பதாகவும், டீசல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 23 காசுகள் அதிகரித்திருக்கிறது என்றும் அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே மாநிலங்கள் தங்களுடைய வரியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

Previous articleமத்திய அரசின் குறிக்கோள் இதுதான்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்!
Next articleதமிழக அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!