இந்த மாதம் மேஷம் ராசியினருக்கு சனிபகவானின் வழிபாடு சிறப்பை தரும் எனவே சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மற்றும் எள்ளினை கொண்டு தீபம் ஏற்றுவது சிறப்பு. சனிக்கிழமை அன்று யாரேனும் ஒருவருக்காவது உணவு வழங்குவது மேலும் சிறப்பைத் தரும். தேக ஆரோக்கியம் என வரும் பொழுது முதுகில் கவனம் தேவை. படுக்கையில் படுக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் சற்று கவனம் தேவை.
இந்த மாதம் மேஷம் ராசியினருக்கு சில பொறுப்புகள் தேடி வரும். பண பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அனைத்திலும் ஜெயம் உண்டாகக்கூடிய சிறந்த மாதமாக இந்த மாதம் விளங்கும். தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ரீதியாகவும், உறவுகள் ரீதியாகவும் சிறந்த அனுகூலம் உண்டாகும்.
மனதிற்குப் பிடித்த இடத்திற்கு அல்லது செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு செல்வாக்கு கூடும் இதனால் மனதிருப்தி ஏற்படும்.
அனைத்து காரியங்களிலும் சிறந்த அனுகூலத்தை தரக்கூடிய மாதமாக இந்த மாசி மாதம் மேஷம் ராசியினருக்கு விளங்கும். சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.