ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்!
நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் தான் ரத்தம்.
இப்படமானது 95சதவீதம் நிறைவடைந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது
இந்த கொடூரமான சம்பவத்தையும், மன அழுத்தத்தையும் தாண்டி கடமை தவறாது இந்த ரத்தம் பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இவரது இந்த கடமை உணர்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களையும்,ஆறுதல்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த ரத்தம் திரைப்படமானது இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் சி.எஸ் அமுதன் ஆவார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் மஹிமா நம்பியார், நந்திதாஸ்வேதா, ரம்யா நம்பீசன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த ரத்தம் திரைப்படமானது விஜய் ஆண்டனிக்கு வெற்றியை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். இந்த நிலையில் படம் பார்த்த ஒரு சில ரசிகர்கள் இப்படத்தைப் பற்றிய கருத்துக்களை அவர்களது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர்.
ரத்தம் திரைப்படத்தை பற்றி ரசிகர்களின் கருத்தாவது:
ரத்தம் திரைப்படமானது ஒரு கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது எனவும், இப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் பல திருப்பங்களுடனும், திரில்லர்களுடனும் அமைந்திருக்கும் எனவும், நடைபாண்டிலிருக்கும், அரசியல் சூழ்நிலைகளில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை இயக்குநனர் அழகாக காட்சிப்படுத்தி,அதனுடைய குற்றங்களை தொடர்புப்படுத்தி காட்டியிருக்கிறார் என கூறியுள்ளனர்.
மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி அவர்களின் ரோல் அனைவரும் கவரும் வகையில் இருக்கும் எனவும், இதில் விஜய் ஆண்டனி அருமையாக நடித்துள்ளார் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்