நமது முன்னோர்கள் அந்த காலங்களில் பூஜை அறையில் மட்டுமல்லாமல் வீட்டின் அனைத்து இடங்களிலுமே விளக்கினை ஏற்றுவார்கள். ஏனென்றால் அந்த காலங்களில் மின்சார இணைப்பு கிடையாது. எனவே அவர்கள் பூஜை அறை மட்டும் அல்லாமல் வீட்டின் நிலை வாசலில் விளக்கு, தொங்கு விளக்கு மற்றும் மாட விளக்கு போன்ற விளக்குகளை ஏற்றி வந்தனர். ஆனால் இப்பொழுது நமது பூஜை அறையில் எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அந்த சந்தேகத்திற்கான பதிலை தற்போது காண்போம்.
நமது பூஜை அறையிலேயே மூன்று திசைகளை பார்த்தவாறு விளக்குகளை ஏற்றலாம். அதாவது கிழக்கு பார்த்தவாறு, மேற்கு பார்த்தவாறு, வடக்கு பார்த்தவாறு. ஆனால் தெற்கு பார்த்தவாறு மட்டும் விளக்கினை ஏற்றக்கூடாது. விளக்கினை குளிர வைக்கலாமா என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அதாவது நமது வீட்டில் குழந்தைகளுக்கு எட்டுமாறும் அல்லது மிகச் சிறிய அறை தான் ஏதேனும் ஒரு துணியோ பேப்பரோ உடனே பற்றிக்கொள்ளும் என இருப்பவர்கள் அந்த விளக்கினை குளிர வைக்கலாம். மற்றபடி விளக்கானது தானாக குளிர்ந்தால் சிறப்பை தரும்.
அதிலும் குறிப்பாக காமாட்சியம்மன் விளக்கினை நாம் குளிர வைக்க கூடாது. அதுவாக தானாகவே குளிர வேண்டும். ஒரு சில வீடுகளில் பூஜை அறையில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளில் சாமி படங்களை வைத்து வழிபடுவோம். அவ்வாறு இருக்கும் போது விளக்கினை ஒவ்வொரு அடுக்கிலும் ஏற்ற வேண்டும். ஒரு அடுக்கில் மட்டும் பொதுவாக என ஏற்றி விடாமல் மூன்று அடுக்குகளிலும் விளக்கினை ஏற்ற வேண்டும்.
இவ்வாறு பல அடுக்குகளில் சாமி படங்களை வைத்து வழிபடும் போது பெரும் கடவுளான சிவபெருமான், முருகன், லட்சுமி, சரஸ்வதி போன்றோரின் படங்கள் உள்ள அடுக்குகளில் காமாட்சியம்மன் விளக்கோ அல்லது குத்து விளக்கோ ஏற்றுக் கொள்ளலாம். மற்ற நமது விருப்ப தெய்வங்கள் உள்ள அடுக்குகளில் அகல் விளக்கோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விளக்கினியோ ஏற்றுக்கொள்ளலாம்.
அதேபோன்று குத்து விளக்கினை ஏற்றும் பொழுது ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை ஒரு முகத்தில் ஏற்றினால் போதுமானது. ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ ஐந்து முகத்தினையும் ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக விளக்கிற்கு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பூஜையறையில் ஒரே ஒரு அடுக்கில் மட்டும்தான் சாமி படங்கள் உள்ளது எனக் கூறுபவர்கள் ஏதேனும் ஒரு விளக்கினை ஏற்றினால் மட்டுமே போதுமானது. அதே சமயம் நிலை வாசலிலும் விளக்கினை ஏற்றுவது சிறப்பை தரும். எனவே நிலை வாசலிலும் விளக்கினை ஏற்ற முயற்சி செய்து பாருங்கள்.