ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?

Photo of author

By Priya

ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?

Priya

Mongoose vs Snake

Mongoose vs Snake: பாம்பு என்று சொன்னால் போதும் அவ்வளவு தான். பாம்பு என்றால் படையே நடுக்கும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு பாம்பு என்று பெயர் சொன்னாலே பயம் தான். ஒரு வேளை நம் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டால் உடனே பயந்து போய் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்து எப்படியும் பாம்பை பிடித்துவிடுவோம்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் போது இந்த பாம்பு பிடிப்பவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு துணிச்சலாக பாம்பை பிடிக்கிறார்கள் என்று. அதற்கு காரணம் அவர்கள் முறையான பயிற்சி எடுத்திருப்பார்கள். எனவே தான் அவர்கள் தகுந்த ஆயுதங்களை பயன்படுத்தி பாம்பை லாவகரமாக பிடித்து சென்றுவிடுகிறார்கள்.

இந்நிலையில் பாம்புடன் நேருக்கு நேர் , தைரியமாக சண்டையிடும் ஒரு விலங்கு என்றால் அது கீரி தான். நம் வீட்டில் கூட ஏன் இப்படி கீரியும், பாம்பு போல சண்டைப் பிடித்து (Mongoose Snake Fight in tamil) கொள்கிறீர்கள் என்று கேட்பார்கள். கீரி பாம்பை கண்டால் போதும் வழிய சென்று அதனை கடித்து குதறி விடும். அந்த அளவு பாம்பை கண்டால் அதுக்கு பிடிக்காது. தற்போது அனைவருக்கும் ஒரு சந்தேகம் ஏற்படும். பாம்பு ஒரு கடி கடித்தாலே அதன் விஷத்திற்கு பெரிய யானையே இறந்து போய் விடும். ஆனால் கீரி மட்டும் எப்படி உயிர் பிழைக்கிறது? என்ற சந்தேகம் ஓடிக்கொண்டிருக்கும்.

அதற்கு காரணம் கீரியின் உடம்பில் அசிட்டைல்கோலின் ரிஃப்ளெக்ஸ் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. ஒருவேளை பாம்பு கீரியை கடித்துவிட்டாலும் இந்த வேதிப்பொருள் பாம்பின் விஷத்தை எதிர்த்து அதனை சமன் செய்கிறது. மேலும் கீரியின் மேல் புற தோல் மிகவும் கடினமானதாக இருக்கும். இது பாம்பின் பல் அதன் தோலில் பதியாதவாறு மிக கடுமையானதாக இருக்கும்.

மேலும் படிக்க: சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்.. அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலி தான்..!