பிரபல கிரிக்கெட் வீரர் சார்பாக கொடுத்த நிவாரண நிதி இத்தனை கோடியா?
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.நாள்தோறும் ஏற்படும் இறப்புகளாலும், பொருளாதார நெருக்கடியாலும் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி போய் உள்ளனர்.
இந்நிலையில் சில நிறுவனங்கள் நிவாரண நிதியாகவும்,ஆக்சிஜன் சிலிண்டர்களாகவும், முதலமைச்சரிடம் தந்து கொண்டு இருக்கின்றன.முதலில் டி.வி.ஸ். நிறவனமும், ஓலா நிறுவனமும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தந்தது.
அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா சிவகுமார் அவர்கள் அவரது குடும்பத்தின் சார்பாக முதல்வரிடம் 1 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.இதே போல் ஹிந்தி பட உலகில் அமிதாப் பச்சன் 15 கோடி வரை நிவாரணம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.அதே போல் சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களும், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து கொரோனா நிவாரண நிதி திரட்டி உள்ளனர்.
அது தற்போது 11 கோடியை எட்டியுள்ளது என்றும் அவர்களின் பங்காக ஏற்கனவே 2 கோடி அளித்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.இந்த ஜோடி சொன்ன நாட்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அவர்கள் 7 கோடி என்ற எண்ணத்தில் நிதி திரட்ட ஆரம்பித்த நிலையில், அவர்களின் முயற்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.