அர்ச்சனை தேங்காய் எப்படி உடைந்தால் பலன் தரும்!! அழுகி இருந்தால் தீங்கு நடக்குமா?

0
15
How the sacred coconut is broken gives fruit!! Does rotting cause harm?
How the sacred coconut is broken gives fruit!! Does rotting cause harm?

நமது வீட்டின் பூஜையறையிலோ அல்லது கோவிலிலோ தேங்காய் உடைத்து வழிபடுவது என்பது ஐதீகம். அப்படி உடைக்கக்கூடிய தேங்காய் எப்படி உடைந்தால் என்ன பலன் கிடைக்கும்? தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா? இல்லை கெட்டதா? என்பது குறித்து காண்போம்.

தேங்காய் என்பது மனிதனுடைய ஆணவம், கன்மம், மாயை போன்ற மூன்று விஷயத்தை அடக்கியது தான் தேங்காய் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது தேங்காய் மட்டையை மாயை என்றும், தேங்காய் நாரை கன்மம் என்றும், தேங்காய் ஓட்டினை ஆணவம் என்றும் கூறப்படுகிறது.

இறுதியாக உள்ளே இருக்கக்கூடிய வெள்ளைப் பருப்பானது பரிசுத்த ஆன்மா என்று கூறப்படுகிறது. எனவே தான் ஆணவம், கன்மம், மாயை என்ற இந்த மூன்று விஷயத்தை நாம் நீக்கினால் மட்டுமே கடவுளின் ஆசியை பெற முடியும் என்கின்றனர். நாம் உடைக்கக்கூடிய தேங்காயின் உடையும் தன்மையை வைத்து தான் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையுமா என்பது குறித்து யூகிப்பர். அவ்வாறு உடையும் தேங்காய் சரிபாதி ஆக உடைந்தால் குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும் என்று பொருள்.

தேங்காயின் மேல் பகுதி அதாவது கண் பாகம் உள்ள பகுதி பெரியதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் அடைந்தால் வீட்டில் செல்வம் பெருகும், பொருளாதாரம் உயரும் மற்றும் தொழிலில் முன்னேற்றமும் அடையும் என்று பொருள். அதேசமயம் கண் பகுதி சிறியதாகவும் அடிப்பகுதி பெரியதாகவும் அடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் அமைதியும், மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும் என்று கூறப்படுகிறது.

தேங்காய் உடையும் பொழுது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும் என்று கூறப்படுகிறது.
தேங்காய் உடைக்கும் பொழுது அதனுள் பூ இருந்தால் நிச்சயம் நீங்கள் செய்யக்கூடிய காரியம் வெற்றியில் முடியும் என்று பொருள்.
தேங்காய் நீள்வாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனை உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அதாவது தேங்காய் உடையும் பொழுது தவறாக உடைகிறது என்றால் கடவுள் நமக்கு வரப்போகிற பிரச்சனையை முன்கூட்டியே தெரிவிக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். தேங்காய் உடையும் பொழுது அழுகி இருந்தால் நினைத்த காரியம் சற்று தள்ளிப் போகும் என்று பொருள். அதே சமயம் கண் திருஷ்டிக்காக உடைக்கக்கூடிய தேங்காய் தூள் தூளாக சிதறினால் திருஷ்டி விலகியதாக அர்த்தம்.

ஆனால் அவ்வாறு திருஷ்டிக்காக உடைக்கக்கூடிய தேங்காய் உருண்டு ஓடினால் வாழ்க்கையும் அவ்வாறே உருண்டு ஓடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

Previous articleமூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? மூலம் நட்சத்திரம் ஆபத்தானதா
Next articleவாஷிங் மெஷின் வாங்க போறீங்களா.. டாப் லோட் Vs பிரன்ட் லோட்!! எது சிறந்தது?? எதை வாங்க வேண்டும்!!