எப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!!

0
238
#image_title

எப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!!

கண் திருஷ்டியில் இருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்போம். கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து சீக்கிரம் விடுபட இந்த பரிகாரம் உங்களுக்கு துணையாக நிற்கும்.

பொதுவாகவே நம் வீட்டிற்குள் வருபவர்களால், வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டுக்கும் கண் திருஷ்டி படும். இவர்களுடைய வீடு மட்டும் இவ்வளவு அழகாக உள்ளது. இந்த வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலையை செய்கிறார்கள். இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று, அவர்களை அறியாமலேயே ஒரு சிறிய எண்ணம் உண்டாகும். இந்த எண்ணம் தவறான எண்ணம் என்று சொல்லிவிட முடியாது. நம்மிடம் இல்லாத ஒன்று அடுத்தவர்கள் வீட்டில் இருந்தால் அதை பார்க்கும் போது நமக்கு ஒரு ஏக்கம் வரத்தானே செய்யும். இந்த ஏக்கம் தான் கண்திருஷ்டியாக மாறும்.

தேவையான பொருட்கள்:

1.தண்ணிர்
2.மஞ்சள் தூள்
3.மிளகு
4.கல் உப்பு

அடுத்தபடியாக வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சுத்தமான ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு, ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து உங்களுடைய வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். கீழே ஊற்றி விடாமல் ஜாக்கிரதையாக வைக்கவேண்டும். இந்த தண்ணீரை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் எடுத்து அப்படியே நிலை வாசல்படிக்கு வெளிப்பக்கமாக கீழே ஊற்றி விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை சக்தி எல்லாம் இந்த தண்ணீரோடு சேர்ந்து வீட்டிற்கு வெளியே சென்றுவிடும். இதேபோல அமாவாசை தினத்திலும் இந்த தண்ணீர் பரிகாரத்தை செய்யலாம்.

இதனை தொடர்ந்து நல்ல நாட்களில் மட்டும் அல்லாமல் வீட்டிற்கு எவரேனும் விருந்தாளிகள் வருகிறார்கள் என்றாலும் அந்த நேரங்களில் செய்யலாம். இவ்வாறு இதனை செய்தீர்கள் கண்திருஷ்டி மறைந்து போகும்.

 

 

Previous articleஒரே இரவில் தொப்பை குறைய எளிய முறை!! இதை செய்து பாருங்கள்!!
Next articleவெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!