ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைப்பது எப்படி? இனி வீட்டில் இருந்தபடி நீங்களே இதை செய்யலாம்!

0
108
How to link aadhaar card with ration card in Tamil
How to link aadhaar card with ration card in Tamil
ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைப்பது எப்படி? இனி வீட்டில் இருந்தபடி நீங்களே இதை செய்யலாம்!

How to link aadhaar card with ration card in Tamil:

ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் எவ்வாறு வீட்டில் இருந்தபடியே இணைப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்ளது. அந்த ரேஷன் கார்டு தொடர்பாகவும் பல புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய மிஷின் வழங்கப்பட்டது. கை ரேகை வைப்பது, விற்பனை பில் தருவது உள்பட புதிய அம்சங்கள் கொண்ட மிஷின்கள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் தற்பொழுது ரேஷன் அட்டைகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக அறிவித்து வருகின்றது. இதை வீட்டில் இருந்தபடியே எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

How to link aadhaar card with ration card in Home:

ஆதார் கார்டை வீட்டில் இருந்தபடி இணைப்பது எப்படி???
* முதலில் லேப்டாப் அல்லது மொபைல் இதை எடுத்துக் கொண்டு அதித் பிடிஎஸ் அதாவது பப்ளிக் டிஸ்ட்ரிபியூசன் சிஸ்டம்(Public Distribution System)  தளத்திற்கு செல்ல வேண்டும்.
* அதில் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்ட் இணைப்பதற்கான(Ration Card Aadhaarcard Link) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
* அதன்பின்னர் வரும் பெட்டியில் உங்கள் ரேஷன் கார்ட் எண்ணை உள்ளிட வேண்டும்.
* அதைத் தொடர்ந்து ஆதார் கார்டு எண்ணை அதற்குரிய பெட்டியில் உள்ளிட வேண்டும்.
* அதன் பின்னர் ஆதார்கார்டு மற்றும் அல்லது ரேஷன் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அதற்குறிய பெட்டியில் கொடுக்க வேண்டும்.
* அதன் பின்னர் சப்மிட்(Submit) என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
* உங்கள் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை சரியாக ஆதார் ரேஷன் லிங் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.
* அதன் பிறகு உங்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு லிங் செய்வதற்கான வேலைகள் நடைபெறும்.
இதை நாம் செய்யாவிட்டால் ரேஷன் சேவைகளை தொடர்ந்து பெற முடியாது. எனவே வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் உங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் லிங்க் செய்து விடுங்கள்.