உறை மோர் இல்லையா? இனி சுலபமாக வீட்டிலேயே தயிர் தயார் செய்யலாம்..!

0
378
how to make curd without curd
#image_title

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக உள்ளதா? என்று கேட்டால் சந்தேகம் தான். காரணம் இன்றைய நவீன உலகத்தில் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று ஆசைகள் இருந்தாலும், பசிக்காக கிடைக்கம் உணவை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் நமது உணவில் நாம் எவ்வாறு காய்கறிகளை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு மற்ற உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நமது உடலுக்கு வைட்டமின்கள், தாதுப்புக்கள் போன்று கால்சியமும் அவசியம். பொதுவாக பாலில் கால்சியம் அதிகமாக இருக்கும். அது நமது உடலிலுள்ள எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. கால்சியம் சத்து தான் நமது எலும்பை வலிமை அடைய செய்கிறது. இதனால் தான் நமது அன்றாட வாழ்க்கையில் பால் சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது. சிலருக்கு பால் பிடிக்காது, அதனால் அவர்கள் பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை (how to make curd without curd in Tamil) உணவில் சேர்த்துக்கொண்டால் போதுமான அளவு கால்சியம் உடலுக்கு கிடைக்கும்.

பொதுவாக தயில் உறைய வைப்பதற்கு உறை மோர் (Urai More illamal Thayir Seivathu Eppadi) இருந்தால் தான் தயிர் செய்ய முடியும். ஆனால் உறை மோர் இல்லாமல் தயிர் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்

முதலில் பாலை நன்றாக காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். பால் சூடு ஆறியதும்  அதில் 2 அல்லது 3 மிளகாய் காம்பை சேர்த்தால் மறுநாள் கெட்டியான தயிர் கிடைத்துவிடும்.

எலுமிச்சை சாறு

பாலை நன்றாக காய்ச்சி பால் நன்றாக ஆற வேண்டும். ஏனென்றால் பால் சூடாக இருந்தால் பால் திரிந்துவிடும். எனவே எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு முன்பாக ஒருமுறை பால் ஆறிவிட்டதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் 1 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் கெட்டியான தயிர் தயாராகிவிடும்.

how to make curd without curd

தயிர் காய்ச்சிவதற்கு (Thayer Seivathu Eppadi) முன்பாக பாலில் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக உள்ள பாலை காய்ச்சி மேலே கூறியுள்ள டிப்ஸ்-ஐ பயன்படுத்தினால் போதும் எளிமையான முறையில் கெட்டியான தயிர் தயாராகிவிடும்.

Previous articleபித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்..! என்ன செய்யலாம்..!
Next articleBest Ac 2024: சியோமியின் அசத்தல் தயாரிப்பு..! AC + Heater மாடல்..!