Godhumai Muttai Dosai: வழக்கமாக செய்யும் இட்டலி, தோசை, பூரி, பொங்கலுக்கு பதிலாக ஒருமுறை கோதுமாவு வைத்து புதுமையான முறையில் இந்த கோதுமை முட்டை தோசை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்க. அதன் பிறகு அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த கோதுமை மாவு முட்டை தோசை (godhumai muttai dosa recipe in tamil )சுவையாக இருக்கும். நாம் இந்த பதிவில் godhumai muttai dosa seivathu eppadi என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 1 கப்
- முட்டை – 4
- பால் – 1 கப்
- வெங்கயாம் – 1/2 கப் ( நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
- மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இந்த கோதுமை மாவு முட்டை தோசை செய்ய ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு கப் கோதுமை மாவு மற்றும் 1 கப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு கிண்ணத்தில் மீதி உள்ள 3 முட்டை-யை உடைத்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல் வைத்து, கல் சூடானதும் அதில் எண்ணெய் தேய்த்து கரைத்து வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த தோசை மீது அடித்து வைத்துள்ள முட்டை கலவையை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேகவைத்து இறக்கினால் சுவையான முட்டை தோசை தயார்.
இந்த தோசையை தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.