Road Side Kalan recipe: ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. வெறும் 5 நிமிடத்தில் சுவையான காளன் செய்வது எப்படி?

Photo of author

By Priya

Road Side Kalan recipe: மாலை நேரத்தில் இந்த காளன் சாப்பிடாவர்கள் யாரும் இல்லாதவர்கள் என்று தான் கூறவேண்டும். அனைவருக்கும் இந்த காளன் மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை சாப்பிடுவதற்கு நாம் ரோட்டுக்கடைக்கு சென்றால் சுவையாக சாப்பிடலாம். இதனன நாம் வீட்டிலே மிகவும் சுலபமாக செய்யலாம். ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு இதன் டேஸ்ட் இருக்கும். இந்த பதிவில் ரோட்டுகடை ஸ்டைலில் காளன் எப்படி செய்வது என்று (Road Side Kalan recipe in Tamil) பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

காளான் – 1 பாக்கெட்
முட்டை கோஸ் (சிறியது)-1
மைதா – 1/2 கப் (50 கிராம்)
சோளமாவு – (25 கிராம்)
வெங்காயம் – 4
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 கரம்மசாலா
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு காளான், முட்டைகோஸ், மைதா மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோளமாவு, கரம்மசாலா, சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து கிளறி அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காளனை பொறித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

அதன்பிறகு அடுப்பில் வைத்து அதில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி காெள்ள வேண்டும். அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சோளமாவை சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்காெள்ள வேண்டும். அதன்பிறகு அதனை வதங்கியதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு பொறித்து  வைத்துள்ள காளனை அதில் சேர்த்து கிளறினால், சுவையான ரோட்டுக் கடை காளான் தயார்.

மேலும் படிக்க: இந்த வெயிலுக்கு அடுப்பு இல்லாமல் வெறும் 3 பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி?