இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

Photo of author

By Janani

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

Janani

பொதுவாக இறைவனுக்கு நாம் நெய்வேத்தியம் செய்யும் பொழுது நெய்வேத்தியம் படைக்கக்கூடிய இடம் மற்றும் எதில் வைத்து நாம் நெய்வேத்தியம் படைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பூஜை அறையில் சுவாமிக்கு முன்னாடி இலை போடப் போகிறோம் என்றால், அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி நன்றாக துடைத்து விட்டு, அந்த இடத்தில் சிறியதாக ஒரு கோலம் போட வேண்டும்.

வெறும் தரையிலோ அல்லது வெறுமன காய்ந்த தரையிலோ சுவாமிக்கு இலை போடக்கூடாது. இலை போடுவதற்கு முன்பு இவ்வாறு அந்த இடத்தை சுத்தம் செய்து, கோலம் போட வேண்டும். அதன் பிறகு நாம் செய்த நெய்வேத்தியம் ஒரு இலையில் வைக்க முடியும் என்றால், ஒரு இலையிலும் அல்லது மூன்று இலையிலும் நெய்வேத்தியம் போட வேண்டும்.

ஆனால் இரட்டை இலையாக நெய்வேத்தியம் போடக்கூடாது. ஆனால் ஒரு சில குடும்பங்களில் படையல்கள் போடும்போது, இரண்டு இலைகள் போடும் பழக்கம் வைத்திருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்கள் அவரது குடும்ப பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒன்று அல்லது மூன்று இலைகளில் நெய்வேத்தியம் செய்வது சிறப்பானதாக இருக்கும்.

இலையில் நாம் சாப்பிடும் பொழுதும் சரி, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யும்பொழுதும் சரி இலையின் நுனிப்பகுதி இடது கையின் பக்கத்திலும், இலையை அறுத்தப் பகுதி வலது கையின் பக்கத்திலும் இருக்குமாறு போட வேண்டும். உதாரணமாக சுவாமிக்கு மூன்று இலைகளில் நெய்வேத்தியம் செய்து வைத்திருந்தால், அதனை அந்த குடும்பத்தில் உள்ள மூன்று பேர் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

சுவாமிக்கு படைத்த இலையில் நாமும் சாப்பிட்டுக் கொள்ளலாம். எனவே சுவாமிக்கு நெய்வேத்தியம் படைத்து, தீப தூப ஆராதனை காட்டி தமது வழிபாடுகளை செய்து முடித்த பின்னர், ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து அந்த நெய்வேத்திய உணவை நாமும் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.