பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் காலை உணவாக இட்லி தான் இருக்கும். அதற்கு பருப்பு சாம்பார், சட்னி, பொடி என்று எப்போதும் போல ஒரே மாதிரியான காம்பினேஷனில் தான் உண்போம். இனி இட்லி செய்தால் இந்த பருப்பு இல்லாத ரோட்டுக்கடை சாம்பார் செய்து கொடுங்கள். அவ்வளவுதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு இல்லா சாம்பார் இட்லி மட்டுமல்லாமல் தோசையுடனும் அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இந்த பதிவில் பருப்பு சேர்க்காத சாம்பார் (without dal sambar) செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் – (சிறியது) ஒரு கைபிடி அளவு
- பச்சை மிளகாய் – 2
- பூண்டு- 10 பல்
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம் -1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
மசாலா வதக்கி அரைப்பதற்கு
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- தக்காளி – 5 ( நறுக்கியது)
- பொட்டுக்கடலை – 3 டேபுள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- முதலில் சாம்பார் செய்வதற்கு மசாலா அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வதக்குவதற்கு எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி காெள்ள வேண்டும். பிறகு அதில் சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு பொட்டுக்கடலை சேர்த்து கிளறி இறக்கி வைத்த பிறகு ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், சிறிதளவு பெருங்காள தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கலவையை இதில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பருப்பு சேர்க்காத ரோட்டுக்கடை சாம்பார் தாயார்.
மேலும் படிக்க: மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இனி ஈஸியா செய்யலாம் வீட்டில்..!