தாமதத்தினால் காண்டான கணவன்! மனைவியை மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த கொடூரன்!

Photo of author

By Hasini

தாமதத்தினால் காண்டான கணவன்! மனைவியை மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த கொடூரன்!

தற்போதெல்லாம் மக்களுக்கு பொறுமை என்பதே இருக்க மாட்டேன் என்கிறது. பொறுமை இல்லாமல் எதற்கெடுத்தாலும் சட்டென்று கோபப்பட்டு விடுகின்றனர். இது பலரது வாழ்க்கையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நம் கையை மீறி பல சம்பவங்களும் நடந்தேறி விடுகின்றன. கோபத்தை குறைத்தால் நம் வாழ்க்கை சிறப்புடன் இருக்கும்.

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் ஹிராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே. 50 வயதான இவர் வனத்துறையின் தினக்கூலி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா பாய். இவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. இந்த தம்பதிக்கு 23 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார். சனிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராஜ்குமார் குளிக்க சென்றுள்ளார்.

அதன்பிறகு மனைவியிடம் துடைக்க துண்டு கேட்டுள்ளார். ஆனால் மனைவியோ அப்போது பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்ததன் காரணமாக இருங்கள் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் செய்த வேலையை முடித்துவிட்டு எடுத்துச் சென்றிருக்கிறார். அதன் காரணமாக கோபமடைந்த அவரது கணவன் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவியின் தலையிலேயே அவரது ஆத்திரம் தீரும் வரை அடித்தே கொலை செய்துள்ளார்.

இதில் புஷ்பா பாய் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடிக்க உயிரிழந்துவிட்டார். இதனை தடுக்க வந்த மகளையும் ராஜ்குமார் மிரட்டியுள்ளார். இது குறித்து குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

புதிதாக திருமணம் செய்து இருந்தால் கூட பரவாஇல்லை. பல வருடங்கள் கணவனுக்காக விட்டு கொடுத்து வாழ்ந்து வந்த மனைவியை அவர் இவ்வாறு அடித்தே கொலை செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன ஆத்திரம் மனைவிதானே சிறிது காத்து இருந்தால் என்ன? அதன் காரணமாக இப்போது அவர் கைதாகி சிறைக்கு செல்கிறார். இதெல்லாம் தேவையா? மனைவி என்பவள் சதா வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து பேசாமல் எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டால் நல்ல மனைவி என்று கூறி கொள்கின்றனர்.