மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் எடுத்து ஒரு புதிய சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. அதே வேளையில் கோஹ்லி, டு பிளசிஸ். தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.
நேற்று(ஏப்ரல்15) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவியாஸ் ஹெட். அவருடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹெட் மிகக் குறைவான பந்துகளில் சதமடித்து விளாசினார். அவருடன் இணைந்த கிளாசன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
8 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் அடித்து 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவியாஸ் ஹெட் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசன் 7 சிக்சர்கள் அடித்து 67 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக களமிறங்கிய அப்துல் சமாத் மற்றும் மார்க்ரம் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில். முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் தொடர்ந்து அதிரடியாக டுபிளசிஸ் விளையாடிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த டுபிளசிஸ் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். போட்டி முடிந்தது என்று நினைக்க பின்னர் களமிற தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் அரைசதம் அடித்து 83ஹரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் சிற்ப ரன்கள் எடுக்க பெங்களுரு அணி 20.ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்தது. இதன் மூலமாக 4வது வெற்றியை பெற்றுள்ளது. மேலும் பெங்களூரு அணி தன்னுடய ஆறாவது தோல்வியை பெற்றுள்ளது.