நான் இயக்குநர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்! விஜய் பட நடிகை பேட்டி! 

Photo of author

By Sakthi

நான் இயக்குநர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்! விஜய் பட நடிகை பேட்டி!
இயக்குநர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக நடிகர் விஜய் படத்தில் நடித்து வரும் நடிகை மீனாட்சி சௌத்ரி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி திரைப்படம் ஒன்றில் படித்தவன். மூலமாக சினிமாவுக்குப் நுழைந்த நடிகை மீனாட்சி சௌத்ரி அவர்கள் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா கிராண்ட் இண்டர்நேஷ்னல் 2018 போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து மகுடம் சூடினார்.
இதையடுத்து 2019ம் ஆண்டு வெளியான ஹிந்திப் படமான அப்ஸ்டார்ட்ஸ் திரைப்படத்தில் மீனாட்சி சௌத்ரி நடித்தார்.  அதன் பின்னர் இச்சட்டா வாஹனமுலு நிலுப்பரடு, ஹிட் தி செகன்ட் கேஸ், கில்லாடி ஆகிய தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழில் வெளியான கொலை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மீனாட்சி சௌத்ரி அவர்கள் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்தார்.
தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை மீனாட்சி சௌத்ரி அவர்கள் இயக்குநர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மீனாட்சி சௌத்ரி அவர்கள் “நான் தற்பொழுது சீனியர் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வருகின்றேன். அதே போல இளம் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வருகின்றேன். இவ்வாறு ஒரே நேரத்தில் சீனியர் நடிகர்களுக்கும் இளம் நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
நான் நடித்து இருக்கும் தி கோட், லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. எனக்கு பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன். அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.