நான் தான் முதல்வர் வேட்பாளர்.. ஆடம் பிடிக்கும் எக்ஸ் சி.எம்!! குழப்பத்தில் பாஜக!!

0
244
I am the CM candidate.. Adam likes X CM!! BJP in confusion!!
I am the CM candidate.. Adam likes X CM!! BJP in confusion!!

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. அதிமுக மட்டுமல்லாது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களும் NDA கூட்டணியில் இருந்தது பாஜகவிற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் அதிமுக பாஜகவில் இணைந்த பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பித்தது. முதலில் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், பிரதமரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறி ஓபிஎஸ் விலகினார்.

பின்னர், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி டிடிவி தினகரனும் விலகினார். இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பயணிப்பார்கள் என்று கூறப்பட்ட சமயத்தில் நால்வர் அணி உருவானது. இந்நிலையில் ஓபிஎஸ் திடீரென தனி கட்சி ஆரம்பிக்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்சி தொடங்கப்பட்ட உடன் பாஜக உடன் கூட்டணியில் இணைய போவதாகவும் ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். பாஜகவில் ஓபிஎஸ் கட்சியும் இணைந்தால், அந்த கூட்டணியில் இரண்டு கட்சி இருக்கும்.

இதனை வைத்து இபிஎஸ்யை வீழ்த்த, முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று ஓபிஎஸ் பாஜகவிடம் வலியுறுத்த போவதாக தகவல் கிடைத்துள்ளது. பாஜக தமிழகத்தில் நிலைப்பெற வேண்டுமானால் அதற்கு இபிஎஸ் ஆதரவு மட்டும் போதாது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களின் ஆதரவும் தேவை. இப்படி இருக்க இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்தால் தான் பாஜகவால் வெற்றி பெற முடியும். இந்நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இவ்வாறான கருத்து மோதலும், முதல்வர் வேட்பாளருக்கான சண்டையும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அது பாஜகவிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலை ஏற்படும் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது.

Previous articleகூட்டணியில் இருந்தாலும் பாஜக தான் ஆட்சி அமைக்கும்.. சுளீரென்று பேசிய பாஜக தலைவர்!!
Next articleவிஜய் உங்க பொறுப்பு.. செங்கோட்டையனுக்கு பாஜக கொடுத்த அசைமெண்ட்!! தவெகவுக்கு வைத்த செக்!!