ADMK: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுகவில் தலைமை போட்டி நிலவிய போது, ஜெயலலிதாவுடன் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு பலரின் ஆதரவோடு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார் சசிகலா. இதன் பிறகு, ஜெயலலிதாவுடன் இணைந்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு பின் கட்சியின் அனைத்து பதவிகளும், பொதுச்செயலாளர் பதவியும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்திய இபிஎஸ் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். இதற்கு செவி சாய்க்காத இபிஎஸ் செங்கோட்டையனை பதவிகளிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் சசிகலா, ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் நால்வரும் ஓரணியாக திரண்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கூட்டணிக்கு தற்போது யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில், இது குறித்து சசிகலா அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும், நான் எப்படி டீல் செய்கிறேன் என்று பொறுமையாக காத்திருந்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து நால்வரின் கூட்டணியில் சசிகலா தன்னை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி கொள்ள ஆசைப்படுகிறார் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். இதன் காரணமாக இவர் இதற்க்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

