
TVK DMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை விட தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தான் அன்றாடம் வந்த வந்த வண்ணம் உள்ளது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
எங்கள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக மாறியுள்ளது. மக்களுக்காக எதையும் செய்யாமல் நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று சிலர் கிளம்பியுள்ளனர் என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். ஏற்கனவே ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் புதிய எதிரிகள் என்று தவெகவை மறைமுகமாக விமர்ச்சித்தால் அவருக்கு விஜய்யின் மீது பயம் என்று கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பாஜகவிற்கு ஏற்கனவே இருக்கும் அடிமைகள் போதாதென்று, புதிய அடிமைகளை கூட்டணியில் சேர்க்க நினைக்கிறது என்று தவெகவை மறைமுகமாக சாடியிருந்தார். விஜய்யை விமர்சித்தால் தேவையில்லாமல் பல்வேறு பிரச்சனைகள் வருவதால் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்யை பற்றி விமர்சிக்க வேண்டமென திமுக தலைமை அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக தான், நேற்று சட்டசபையில் கூட கரூர் விவகாரத்தை பற்றி பேசும் போது விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட ஸ்டாலின் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமாவளவனின் விஜய்யைப் பற்றிய இந்த மறைமுக விமர்சனம், திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தவெக மீது இருக்கும், பயத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் உள்ளது என்பதற்கு சான்று என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.