அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

Photo of author

By Sakthi

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

Sakthi

Updated on:

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

சமீபத்தில் பி.எஸ்.ஜி கால்பந்து அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி அவர் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அண்மையில் பி.எஸ்.ஜி கிளப் அணிக்காக விளையாடி வரும் லையனல் மெஸ்ஸி அவர்கள் அனுமதியில்லாமல் சவுதி அரேபியாவிற்கு சென்றார். இந்த செயலுக்காக லையனல் மெஸ்ஸி அவர்களுக்கு இரண்டு வாரம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பி.எஸ்.ஜி கிளப் அணியின் கால்பந்து வீரர் லையனல் மெஸ்ஸி அவர்கள் இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

லையனல் மெஸ்ஸி வெளியிட்டுள்ள பி.எஸ்.ஜி அணி கால்பந்து வீரர் லையனல் மெஸ்ஸி அவர்கள், “முதலில் என்னுடைய அணி வீரர்களிடமும் மற்றும் பி.எஸ்.ஜி கிளப்பிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அனுமதியில்லாமல் நான் சவுதி அரேபியாவிற்கு சென்றதற்கு பி.எஸ்.ஜி கிளப் என்னை என்ன செய்ய இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.