சென்னை அணியின் தோல்விக்கு இவர்தான் முக்கிய காரணம்! போட்டுடைத்த முன்னாள் வீரர்!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற கல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் டி20 போட்டியில் பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் இருந்ததால் கொல்கத்தா அணிக்கு எதிராக 131 ரன்களை மட்டுமே சேர்த்தது சென்னை அணி. ஆனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை சேர்த்தும் அந்த போட்டியை வெல்ல முடியவில்லை.

இதன்காரணமாக மறுபடியும் மகேந்திரசிங் தோனி கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள் இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவை தோனி சுதந்திரமாக செயல்படவிடவில்லை என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.

தோனிக்கு என்னைவிட மிகப்பெரிய ரசிகன் இருக்க முடியாது ஆனால் பதவியிலிருந்து விலகிய பின்பு அவர் கேப்டன்சியில் அதிகாரம் செலுத்துவது சரியல்ல லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி தான் முடிவுகளை மேற்கொண்டார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அது கடைசி லீக் போட்டியாக இருந்திருந்தால் நெருக்கடியான சூழலுக்காக தோனி முடிவெடுத்தார் என்று தெரிவிக்கலாம். ஆனால் 2வது போட்டியிலேயே இப்படி செய்தால் அது ஜடேஜாவின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்து விடும் என்று அஜய் ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.

நான் தோனியின் முடிவுகளில் எந்தவிதமான குறைகளையும் தெரிவிக்கவில்லை ஆனால் அவர் முடிவெடுப்பது என்பது ஜடேஜாவை வளரவிடாது என்று தெரிவித்திருக்கிறார்.