நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!!

Photo of author

By Sakthi

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!!

Sakthi

Updated on:

நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்!! வெளிப்படையாக பேசிய சமந்தா முன்னாள் கணவர்!!

சமீபத்தில் நடந்த கஸ்டடி படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியுள்ளார். கஸ்டடி திரைப்படத்தில் நடிகை கிரித்தி ஷெட்டி அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், ராதிகா சரத்குமார், அரவிந்த் சாமி இவர்கள் அனைவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனமும், அஞ்சி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

கஸ்டடி திரைப்படம் மே மாதம் 12ம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் நாக சைதன்யா அவர்கள் இந்த படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

கஸ்டடி படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா அவர்களிடம் நிருபர் ஒருவர் இதுவரை நீங்கள் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் நாக சைதன்யா வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யா “இதுவரை நிறைய படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளேன். அதையெல்லாம் எவ்வாறு கணக்கு வைத்துக் கொள்ள முடியும். நிறைய பேருக்கு முத்தம் கொடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.