இவருக்காக தான் ரிஸ்க் எடுத்தேன்! நடிகை பிரியாமணி!

0
147

தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை பிரியாமணி இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு மறுபடியும் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த பிரியாமணி தமிழ், இந்தி ,கன்னடம் தெலுங்கு, போன்ற மொழிகளில் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

அதோடு இவர் பி ஃபேமிலி நேம் என்ற வெப்சீரிஸ் தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா திரை படத்தில் பிரியாமணி நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் பேட்டி கொடுத்த நடிகை பிரியாமணி இரண்டாவது இன்னிங்சில் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றேன். நாரப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு நடிகர் வெங்கடேஷ் உடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இதுவரையில் மூன்று முறை அவருடன் ஒன்றிணைந்து நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக, நடிக்க இயலவில்லை இதன் காரணமாக, கைவசம் பல திரைப்படங்களில் இருந்த சமயத்தில் கூட நாரப்பா திரைப்பட வாய்ப்பு வந்தபோது மற்ற திரைப்படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை வாங்கி இந்த திரைப்படத்திற்கு கொடுத்துவிட்டேன். நடிகர் வெங்கடேஷ் திரைப்படம் என்பதால் மட்டும் தான் இந்த ரிஸ்க்கை நான் எடுத்திருக்கிறேன் என்று தெரிவித்து வருகிறார் பிரியாமணி.

Previous articleஏற்பட்ட திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர்!
Next articleபல்வேறு ஆசிரியர் பணிக்கு 170 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!