நான் அவரைத்தான் காதலிக்கின்றேன்! பத்து வருட உண்மையை கூறிய நடிகை சாய் பல்லவி! 

Photo of author

By Sakthi

நான் அவரைத்தான் காதலிக்கின்றேன்! பத்து வருட உண்மையை கூறிய நடிகை சாய் பல்லவி!
மாரி2, என்.ஜி.கே, கார்கி போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை சாய் பல்லவி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்து வருடமாக காதலித்து வரும் காதலரை பற்றிய உண்மையை கூறியுள்ளார்.
மருத்துவரான நடிகை சாய் பல்லவி நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் நடிக்கத் தொடங்கினார். மலையாளத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படம் தான் இவர் நடித்த முதல் படம். நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தனுஷ், நானி, துல்கர் சல்மான், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சாய் பல்லவி தமிழில் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்தார். கார்கி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
நடிகை சாய் பல்லவியை தேடி பல வாய்ப்புகள் வந்தது. நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கதாப்பாத்திரங்கள் பிடிக்காத காரணத்தினால் அந்த வாய்ப்புகளை மறுத்தார். இந்நிலையில் தற்பொழுது மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி இராமாயணம் திரைப்படத்தில் நடித்து ஹிந்தி மொழியிலும் அறிமுகமாகி இருக்கின்றார்.
இராமாயணம் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி முக்கிய கதாப்பாத்திரமான சீதை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தன் காதலர் யார் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து நடிகை சாய் பல்லவி “மகாபாரதம் காப்பியத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் அர்ஜூனர். அவருடைய மகன் அபிமன்யு. நான் அபிமன்யு அவர்களைத் தான் காதலிக்கிறேன். பத்து வருடமாக அபிமன்யுவை பற்றி படித்து அவரைத்தான் காதலித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.