நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்!

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்!

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மேலும்  தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் யாரையும் குறிப்பிட முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அதனால் அதற்கு யாரெல்லாம் காரணம் என்று தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசிப்பவர் சரவணன். 42 வயதான இவர் கரூரில் உள்ள அதே தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற 42 வயது மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் பணிபுரிந்த அதே பள்ளியில்தான் அந்த தற்கொலை செய்துகொண்ட மாணவியும் படித்து வந்தார். இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசிரியரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்  சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்!

இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் மாணவியின் தற்கொலைக்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்றும், மாணவர்கள் சிலர் தன்னை தவறாக நினைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் நான் எந்த தவறுமே செய்யவில்லை.

என்னை ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியரின் தற்கொலையும், அவரது உருக்கமான கடிதமும் இந்த வழக்கில் மேலும் சில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment