இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை!!வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை!!
இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சண்டையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை என்று அமெரிக்கா தற்பொழுது அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிரை இறந்துள்ளனர். இந்நிலையில் இன்னும் போரை நிறுத்தாத ஈரான் சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்குவ் அவர்களை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் இஸ்ரேலில் வாழும் மக்களையும், அமெரிக்க வீரர்களையும் அமெரிக்கா இரும்பு கவசம் கொண்டு பாதுகாக்கும் என்று கூறினார்.
இதையடுத்து தற்பொழுது இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலை தொடர்ந்து ஈரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா எந்தவொரு தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்கா நாட்டின் வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அவர்கள் “அமெரிக்கா வந்து இஸ்ரேல் நாடு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள என்னென்ன தேவையோ அதற்கு உதவி செய்யும். அதே சமயம் அமெரிக்கா நாடு போரை விரும்பவில்லை” என்று கூறினார்.
அதே போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களின் நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் “ஈரான் நாடு செய்யும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல் நாட்டின் எந்தவொரு நடவடிக்கையிலும் அமெரிக்கா ஒரு அங்கமாக இருக்காது. ஈரானுக்கு எதிராக செயல்படுவதை நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்க மாட்டோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.