முத்த காட்சியில் எந்த நடிகையுடன் நடிக்க ஆசை!! நடிகர் கவின் சொன்ன பதில்!!

Photo of author

By Jeevitha

cinema news:நடிகர் கவின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இதில் முக்கியமாக டாடா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் படம் ஆகியவை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் சுமார் 5 லட்சம் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் அல்லாமல் முன்னதாக கவின் நடித்த ஸ்டார் படம் 17 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் தற்போது பிளடி பெக்கர் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் திரை உலகில் அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கவின் கலந்து கொண்டார். அதில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களுக்கு எந்த நடிகையுடன் முத்தக் காட்சியில் நடிக்க ஆசை என கேட்டுள்ளார்.

அப்போது அவர் பொதுவாக நடிகர்கள் தங்களது ஆரம்பகால படங்களில் காமெடி காட்சிகளில் பெரிதும் நம்பி இருப்பார்கள். பிறகு ரொமான்ஸ், ஆக்சன் என்ற அவரது இடங்கள் வளரும். “இந்த நடிகை உடன் தான் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை” என்று கூறினார். அது மட்டும் அல்லாமல் எனக்கு கதை தான் முக்கியம் கதைக்கு தேவைப்படும் போது தான் முத்த காட்சியில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் இவர் தற்போது  காமெடி அம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கூடிய விரைவில் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகவும் எதிர்பார்க்கலாம்.