எனக்கு தோனி கேப்டன்சியில் விளையாட வேண்டும்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி!!

Photo of author

By Sakthi

எனக்கு தோனி கேப்டன்சியில் விளையாட வேண்டும்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி!
தான் தோனி கேப்டன்சியின் கீழ் விளையாட வேண்டும். அது தான் என்னுடைய ஆசை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அவர்கள் கூறியுள்ளார். அதுவும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் கேப்டன்சியில் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகள், 150 ஒருநாள் கிரிக்கெடீ போட்டிகள் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் எம்.எஸ்.தோனி அவர்களின் தலைமையில் விளையாட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அது தான் அவருடயை ஆசையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் “எம்.எஸ் தோனி அவர்கள் கிரிக்கெட் மீது வைத்துள்ள விழிப்புணர்வும்,  புரிதலும் அற்புதமானது.  விளையாட்டை அமைதியான நடைமுறையில் கொண்டு செல்லும் அவருடைய கேப்டன்சி தனித்துவமாக உள்ளது. இதனால் ஐபிஎல் தொடர்களில் ஏதேனும் ஒரு போட்டியில் எம் எஸ் தோனி தலைமையில் விளையாட ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.