மாமன்னன் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தூக்கம் இல்லாமல் இருந்தேன்!!! இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் பேட்டி!!!
மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்னர் நான் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளராகவும் கதைசொல்லியுமாக இருந்த பவா செல்லத்துறை அவர்களின் “சொல்வழிப்பயணம்” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை மாவட்டம் கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் “தமிழக அரசு எழுத்தாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. மாணவர்கள் புத்தகம் வாங்குவதற்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது மிகுந்த மஙிழ்ச்சியை தருகின்றது.
அண்டை மாநிலங்கள் நமது அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை பற்றி தவறாக பேசுவது வேதனை அளிக்கின்றது. மாணவர்கள் அனைவரும் எதிர்த்து பேசினால்தான் பெரியவர்கள் என்று நினைக்கிறார்கள். மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து சிந்திப்பது மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மட்டும் தான்” என்று பேசினார்.
இதையடுத்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் திரைப்படமாக இருந்தாலும் புத்தகமாக இருந்தாலும் வெளிவர வேண்டும். அவை வெளிவந்த பின்னர் மக்களே அவற்றின் தரத்தை பற்றி முடிவு செய்வார்கள். தற்பொழுது எழுத்தாளர்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் சினிமாவில் இல்லை. எழுத்தும் வாசிப்பும் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. பிற எந்த உயிரினங்களுக்கும் படிக்கும் திறமையும் எழுதும் திறமையும் இல்லை.
மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு வெளியே பேசும் நபர்களால் இரவில் உறக்கம் இல்லாமல் இருந்தேன். ஆனால் திரைப்படம் வெளியான பின்பு தான் வெளியே பேசும் நபர்கள் வேறு. மக்கள் வேறு என்று புரிந்து கொண்டேன்” என்று அவர் கூறினார்.