காபுல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்! ஆவேசமடைந்த அமெரிக்க ஜனாதிபதி!

0
138

காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பலியானார்கள் 140 க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள். அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் மூன்றாவது குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்க அதிபர் அந்த நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதில் காபூல் நகரில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்காக மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

எங்களுடைய அரசாங்கம் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒட்டுமொத்தமாக கருவறுக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் பைடன். அமெரிக்க மக்களை காயப்படுத்த நினைக்கும் எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் மன்னிக்கவும், அல்லது மறக்கப் போவதில்லை என கூறியிருக்கிறார் ஜோ பைடன்.

அமெரிக்கா கண்டிப்பாக உங்களை வேட்டையாடும் இதற்கான உரிய விலையை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும் அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்காகப் போராட எப்போதும் எம்முடைய அரசாங்கம் முன்பே நிற்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅடுத்த ஆட்டத்தை தொடங்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கப் போவது யார்?
Next articleடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்!