சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்… நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுபாண்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மதம், சாதி, மற்ற அடையாளங்கள் அனைத்தையும் விட மொழி, இனம் தான் பெரியது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழன் தான். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த சீமான் அவர்கள் “கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் காங்கிரஸ், திமுக கட்சிகள் எதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது நடந்தது உண்டா?
ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு இருந்தாலும் ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்களும், நிலங்களும் இருப்பதுதான் காரணம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சென்றதற்கு காரணம் மொழி.
மதம், சாதியை விட ஏன் எல்லா அடையாளங்களையும் விட இனம், மொழி தான் பெரியது. இங்கு இருக்கும் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாரும் சிறுபான்மையினர் சிறுபான்மையினர் என்று கூறினால் செருப்பை கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கிறேன். மதத்தை வைத்து மனிதனை பிரிப்பதை ஏற்க முடியாது” என்று கூறினார். மேலும் ஸ்டாலின் அவர்கள் பெரும்பாண்மையா அல்லது சிறுபான்மையா என்றும் செய்தியாளர்களுக்கு மத்தியில் கேள்வி எழுப்பினார்.