ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

Photo of author

By Janani

ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

Janani

I will not act in Rajini Kamal films! The famous actress who revealed the truth!

ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!

ரஜினி, கமல் படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை தான் மறுத்ததாக முன்னாள் தொலைக்காட்சி நடிகை பெப்சி உமா கூறியுள்ளார்.இந்த கருத்து சோசியல் மீடியக்களில் தற்பொழுது trend-ஆகி வருகிறது.

இன்று இருக்கும் டிஜிட்டல் காலகட்டத்திற்கு முந்தைய அதாவது 90-களில் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே.அதில் வரும் பாடல்களும்,நிகழ்ச்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றன. அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருந்தது. மேலும் அப்போதைய கால கட்டத்தில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை என அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் இருந்தது.

மீண்டும் சின்னத்திரையில் பெப்சி உமா? – News18 தமிழ்

ஏனெனில் பெப்சி உமா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்குவார். அதுமட்டுமில்லாமல் அவரின் தமிழ் பேச்சு மொழி இனிமையாக எல்லோரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும்.இதனால் அதிக மக்கள் பார்க்கும் லிஸ்ட்-ல் பெப்சி உங்கள் சாய்ஸ் இடம் பெற்றிருக்கும்.

இதன் காரணமாகவே இவருக்கு பெரிய திரையில் பட வாய்ப்புகள் தேடி வந்தன. குறிப்பாக ரஜினிக்கு ஜோடியாக முத்து படமும்,கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம் பட வாய்ப்பும் வந்திருந்தது.ஆனால் தனக்கு வெளித்திரையில் நடிக்க சம்மதம் இல்லை என மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ,கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோருடனும் நடிக்க வந்த சினிமா மற்றும் விளம்பர படங்கள் என எதையும் ஒத்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.இறுதியாக அவர் சின்னத்திரையில் இருந்து முழுவதும் விலகி விட்டார்.