இந்த கதையில் நான் நடிக்க மாட்டேன்! விஜய் மகனிடம் NO சொன்ன சூரி!

Photo of author

By Jeevitha

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தற்போது ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சூரியிடம் சென்று கதை கூறிய நிலையில் கதையை கேட்ட நடிகர் சூரி அதில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்களின் மகன்  ஜேசன் சஞ்சய் அவர்கள் லண்டன் சென்று சினிமா இயக்கம் பற்றிய படிப்பை படித்து முடித்தார். இதன் பின்னர் தமிழகம் வந்த நிலையில் ஜேசன் சஞ்சய் அவர்கள் தன்னுடைய கதையை லைகா நிறுவனத்திடம் கூறி ஒரு திரைப்படத்தையும் உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து ஜேசன் சஞ்சய் முழுக் கததையையும் முடிக்க சில மாதங்கள் எடுத்த நிலையில் தற்பொழுது முழுக் கதையையும் முடித்துள்ளார். இதற்கு மத்தியில் நடிகர் சியான்  விக்ரம் அவர்களின் மகன் நடிகர் துருவ் விக்ரம் அவர்கள் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடக்கப் போவதாகவும் அந்த திரைப்படத்தில் நாயகியாக இயக்குநர் சங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் அவர்கள் நடிக்கவிருப்பதாகவும் மேலும் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களின் மகன் ஏஆர் அமீன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது ஜேசன் சஞ்சய். அவர்கள் நடிகர் சூரியிடம் சென்று கதை கூறியுள்ளார் என்றும் அந்த கதைக்கு நடிகர்  சூரி மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
ஜேசன் சஞ்சய் அவர்கள் கூறிய கதையை முழுமையாக கேட்ட நடிகர் சூரி அவர்கள் “உங்களுடைய கதை ரொம்ப நல்லா அருமையா இருக்கு. நீங்கள் சொன்ன கதையை திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக மெகா ஹிட் அடிக்கும். இது ஒரு மாஸ் கதை. இது போன்ற கதையில் நான் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் நடித்தால் என்னை எல்லாம் ஹீரோவாக  மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த கதைக்கும் இந்த படத்திற்கும் நான் பொருந்த  மாட்டேன். எனவே நான் உங்கள் கதையில் நடிக்க மாட்டேன்” என்று கூறி ஜேசன் சஞ்சய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகர் சூரி. இதையடுத்து ஜேசன் சஞ்சய் அவர்கள் கதைக்கு பொறுத்தமான அடுத்த ஹீரோவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம்.