திமுகவில் இருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்றும், அப்படியே அழைப்பு வந்தாலும், நான் செல்வதற்கு தயாராக இல்லை என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. க அழகிரி தெரிவித்திருக்கின்றார்.
திமுகவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்ட அழகிரி, கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்து வந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஸ்டாலின், மற்றும் அழகிரி, இடையேயான முதல் போக்கானது உச்சம் தொட இருப்பதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற அழகிரி பல தரப்பினருடனும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றார் என்று தெரிவிக்கிறார்கள்.
அழகிரி தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றார் எனவும், தனி கட்சி ஆரம்பிக்க இருக்கிறார் எனவும், தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் தனியாக கட்சியை ஆரம்பித்தால் ஆகும் செலவினங்கள் ஏற்படும் அலைச்சல்கள் போன்றவற்றை யோசித்து தயங்கி வருகிறார் என்று தெரிவிக்கிறார்கள்.
அப்படி இல்லை என்றால், பாசறை போன்ற ஏதாவது ஒரு அமைப்பை உருவாக்கி ரஜினி கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவு கொடுக்கலாமா என்று யோசிக்கிறார் அழகிரி, என்றும் சொல்லப்படுகின்றது. எப்படியாவது ஸ்டாலினை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்பதே அழகிரியின் நோக்கமாக இருந்து வருகின்றது. அதற்காக சில பல வேலைகளை மறைமுகமாக செய்து வருகின்றார் என்று தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், ஜனவரி மாதம் 3 ஆம் தேதியில் மதுரையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன் பின்னர் கட்சி ஆரம்பிப்பது குறித்த முடிவை அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகின்றது. அதோடு திமுகவில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தாலும் போகமாட்டேன் தொண்டர்கள் கட்சி ஆரம்பிக்க வலியுறுத்தினால் நிச்சயமாக ஆரம்பித்தேன் என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அழகிரிக்கு தற்போது மிகுந்த செல்வாக்கு இருந்து வருகின்றது. அவர் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் ஓட்டுக்கள் சிதறி மாற்றுக் கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் இதன் காரணமாக திமுகவினர் பயம் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகின்றது.