இந்த முறை ஆர்சிபி கோப்பை வெல்லும்!! க்ருணால் பாண்டியா உத்தரவாதம்!!

0
106
I will support RCB team to win the trophy in this IPL series, says Krunal Pandya
I will support RCB team to win the trophy in this IPL series, says Krunal Pandya

RCB: ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில்  கோப்பையை வெல்ல உறுதுணையாக இருப்பேன் க்ருணால் பாண்டியா கருத்து.

இந்தியாவில் கடந்த 2008 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் விளையாடும் அணிகள். தங்கள் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தி தேர்ந்து எடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த மாதத்தில் நடைபெற்றது. அதில் ஆர்சிபி அணி க்ருணால் பாண்டியா ரூ.5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இவரை  ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தீவிர முயற்சி செய்து கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. க்ருணால் பாண்டியா பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சரி சமமாக விளையாடுவார் என கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஆர்சிபி அணி தன்னை தேர்ந்த்தேடுத்தது பற்றி பேசி இருக்கிறார்.

அதில், இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஆர்சிபி அணி முதலிடத்தை பிடித்து கோப்பை வெல்ல வில்லை என்பது எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த முறை ஐபிஎல் தொடரில்  ஆர்சிபி அணி வெற்றி பெற கேப்டன் விராட் கோலி மிகவும் சிறப்பாக விளையாடினார்.

அதை பார்க்கும்போது எனக்கு புதுவித சக்தி கிடைக்கும் என பேசி இருக்கிறார். மேலும், இந்த முறை கண்டிப்பாக ஆர்சிபி கப் வெல்லும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கூறி இருக்கிறார்.

Previous articleஎன் முதுகிற்குப் பின் கஞ்சன் என அழைக்கிறார்கள்!!நடிகர் எம் எஸ் பாஸ்கரன் ஆதங்கம்!!
Next articleகாவு வாங்கும் ஈரோடு இடைத்தேர்தல்!! மகனுக்கு பிறகு தந்தை அடுத்த பலி யார்?