மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக தான் செய்வான்! கெத்து காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

Photo of author

By Sakthi

மதுரைக்காரன் பாசக்காரன் மற்றும் ரோஸ் அதோடு மட்டுமல்லாமல் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தவனும் பரமனுக்கு விசுவாசமாக இருப்பவனும் மதுரையில் இருப்பவன்தான் என்று தன்னைப்பற்றி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். என்னுடன் என்னுடைய பேரன்களும் தமிழக மக்களுக்காக உழைத்திட வேண்டும் என்ற காரணத்திற்காக தற்சமயம் என் வழியில் கிளம்பியிருக்கிறார்கள் என்னுடைய பேரன்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணி மண்டப திறப்பு விழாவிற்கு மதுரை அதிமுக சார்பாக இரண்டாவது கட்டமாக 18 பெட்டிகள் உடைய சிறப்பு ரயிலில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களையும், அதிமுகவினரும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை ரயில் நிலையத்தில் ஒயிலாட்டம், மற்றும் மயிலாட்டம் ,அதோடு காவடி ஆட்டம் மேளதாளங்கள் இரவு 8 மணி அளவில் புறப்பட்டு நேரடியாக சென்னைக்கு சென்று அதன் பிறகு கட்சியினர் விழாவில் பங்கேற்ற பின்னர் மறுபடியும் நாளை மாலை 5 மணி அளவில் ஆகியதே தொடர்வண்டியில் மதுரைக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.

அந்த தொடர்வண்டியில் ,பயணம் மேற்கொள்ளும் அனைத்து தொண்டர்களுக்கும் உணவு, தண்ணீர், போன்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்து அதன் பிறகு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் பொதுமக்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அந்த சிறப்பு ரயிலில் பயண பட்டிருக்கிறார். இதற்கு முன்பாக மதுரை ரயில் நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ உரையாடும்போது, தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் எந்த தலைவருக்கும் இதுபோன்ற ஒரு புகைவண்டி எடுத்துக்கொண்டு அவரின் நிகழ்ச்சிக்கு சென்றதாக வரலாறு கிடையாது .ஜெயலலிதா உடல் நலம் அடைந்து திரும்பி வரவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் காவடி எடுத்து அலகு குத்தி இருந்தோம். அதேபோல தொடர்ச்சியாக ஒரு மாதகாலம் பிரார்த்தனை செய்தோம் ஆனாலும் தற்சமயம் ஜெயலலிதா நம்மிடையே இல்லை. ஆனாலும் அவருடைய நினைவிடத்தை ஒட்டுமொத்த உலகமே வியக்கும் வண்ணம் முதலமைச்சர் வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.

மதுரை மாநகரில் இருந்து தொடர்வண்டி மூலமும், பஸ்கள் மூலமும், 10,000 பேர் வரை செல்ல இருக்கின்றோம். என்னுடன் பொதுச் சேவை ஆற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் என்னுடைய பேரன்களும் தற்சமயம் வந்துகொண்டிருக்கிறார்கள். இயக்கம் கொண்ட கொள்கையை நான் உயிர் மூச்சாக நினைப்பவன் நிறம் மாறிய பூக்கள் ஆக இருக்கக் கூடாது. ஜெயலலிதாவிற்கு ஒரு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காகவே இதை செய்கின்றேன். தற்சமயம் என்னுடைய சொந்த செலவில் தொடர்வண்டியில் மக்களை அழைத்துச் செல்ல இருக்கிறேன் இந்த தொடர்வண்டி பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் நெஞ்சில் ஈரம் அற்றவர்கள். மதுரைக்காரன் எது செய்தாலும் வித்தியாசமாக செய்பவன், ஆழமாக செய்பவன், ஆரோக்கியமாக செய்பவன் தாய்மீது பாசம் வைத்திருப்பவன் அதோடு விசுவாசமாக இருப்பவன் மதுரைக்காரன் தான் என்று நா தழுதழுத்த குரலில் பேசியிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு.