மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?

0
170

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்த வல்லமை மிகுந்தவர். சூதாட்ட புகாரின் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியை விட்டு விலக்கப்பட்டார் சவுரவ் கங்குலி.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சிறந்த அணி நிர்வாகி. மற்றும் தலைமைத்துவப் பண்புகளை கொண்டிருந்த சவுரவ் கங்குலி இப்பொழுது பிசிசிஐ தலைவராக இருக்கின்றார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டியை நடத்தி முடித்தார் இவர்

பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் கங்குலிக்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால், கல்கத்தாவில் இருக்கின்ற உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு இன்று மாலை ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், இன்று லேசான மாரடைப்பு ஏற்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று பிசிசிஐ தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

Previous articleதிட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!
Next articleம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?