ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

0
143
ICourt raises question over porn video case! Brahmin bond filed!
ICourt raises question over porn video case! Brahmin bond filed!

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களில் வெளியாகின. தற்போது அந்த வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு போலீசார், அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த ஆபாச வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது அந்த மனுக்கள் மீதான விசாரணை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா முன்னிலையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முன்னிலையில் நடந்தது. அப்போது இளம் பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆபாச வீடியோ வழக்கில் விசாரணை அதிகாரியாக பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி மூன்று மாதம் விசாரணை 3 மாதம் விடுமுறையில் இருந்தார்.

ஆனால், தற்போது அவர் இல்லாமலேயே விசாரணையை முடித்து அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்துள்ளனர் என்று கூறினார். விசாரணை சரியாக நடைபெறாததால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஒரு வழக்கில் சிறப்பாக விசாரணை நடைபெறும் என்பதற்காகத்தான் அனுபவம் மிகுந்த ஒரு அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். அந்த விசாரணை அதிகாரி 3 மாதம் விடுமுறையில் இருக்கும் போது இந்த வழக்கில் விசாரணை எப்படி நடந்தது.

அவரது அனுபவம் மற்றும் திறமை இந்த வழக்கில் பயன்படுத்தாமலேயே போய்விட்டது. மேலும் அவர் விடுமுறையில் இருந்ததால் சரியாக விசாரணை நடந்து இருக்க சாத்தியமா? எனவும் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இதுபற்றி பதிலளிக்கவும், விசாரணை அதிகாரியான சவுமேந்து முகர்ஜிக்கும் 20 நிமிடங்கள் தலைமை நீதிபதி கால அவகாசம் வழங்கினார்.

ஆனால் அவர் கோர்ட்டு முன்பு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதையடுத்து 3 மாதம் விடுமுறையில் இருந்ததால் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடந்ததால், வழக்கு விசாரணையில் திருப்தி உள்ளதா? என்பதை பிராமண பத்திரம் மூலம் தெரிவிக்கும் படியும் சவுமேந்து முகர்ஜிக்கு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

Previous articleதீவிரமடைந்த கொரோனா மூன்றாம் அலை! ஒரே நாளில் 808 பேர் பலி!
Next articleசேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை