Home World அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!

0
அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!
Ida storm that toppled America! So far 42 people have been killed!

அமெரிக்காவை புரட்டி போட்ட இடா புயல்! இதுவரை 42 பேர் பலி!

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இடா சூறாவளி புரட்டிப் போட்டு விட்டது. தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. வடக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட இதுவரை 42 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் சூறாவளி காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெளிவாக உணர முடிகின்றது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது மிக சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைகளில் கன மழை கொட்டும் காட்சியும் அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்துபோகும் காணொளியையும் உள்ளூர் மக்கள் சிலர் பகிர்ந்துள்ளனர். நியூயார்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்க பகுதிகளிலும், வெளியிடங்களிலும் மக்கள் சிக்கி அவதியுறுகின்றனர்.

அவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் நிறுவனங்கள் மிக கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. அது அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது என்றும், கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படு பயங்கர நிலையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரமும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.