உங்கள் வீட்டின் முன் காகம் கரைந்தால் இது நடக்கப்போகிறது என்று அர்த்தம்!! தெரிந்துகொள்ளுங்கள்!!

Photo of author

By Sakthi

உங்கள் வீட்டின் முன் காகம் கரைந்தால் இது நடக்கப்போகிறது என்று அர்த்தம்!! தெரிந்துகொள்ளுங்கள்!!
பொதுவாக காகம் கரைந்தால் நம்முடைய வீட்டுக்கு உறவினர்கள் வருவார்கள் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் காங்கிரஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதை பார்க்கும் பொழுதும் நமக்கு பல்வேறு விதமான நன்மைகளும் தீமைகளும் நடைபெறும்.
சாதாரணமான நாட்களில் நாம் அனைவரும் காகங்களை விரட்டி அடிப்பது உண்டு. ஆனால் ஆடி 18 போன்ற சிறப்பான நாட்களில் நாம் காகங்களுக்கு உணவு வைத்து அதன் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம். அந்த காகங்கள் நம்மை நோக்கி கரைந்தாலோ அல்லது அது செய்யும் ஒரு சில செயல்களை பார்க்கும் நமக்கும் என்னென்ன நன்மைகள் தீமைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
காகங்கள் களைவது மற்றும் அதை பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள்…
* காகங்கள் ஒருவருக்கு வலது பக்கத்தில் இருந்து இடது பக்கத்தில் சென்றால் அவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். அதே போல இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு சென்றால் தன நஷ்டம் அதிகரிக்கும்.
* நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது காகங்கள் கரைந்து கொண்டே நம்மை பார்த்து பறந்து வந்தால் நாம் பயணம் செய்வதை தவிர்த்து விட வேண்டும்.
* ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு கொடுப்பதை பார்த்தால் நாம் மேற்கொள்ளும் பயணம் இனிமையான பயணமாக மாறும்.
* ஆண் காகமும் பெண் காகமும் சேர்ந்து கரைந்து கொண்டிருப்பதை பார்த்தால் பெண்கள் சேர்க்கை ஏற்படும்.
* ஒரு காகம் பூக்கள், பழங்கள், இரத்தினக் கற்கள் இவற்றை கொண்டு வந்து ஒரு வீட்டில் போட்டால் அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.
* அதே போல காகங்கள் கூடு கட்ட பயன்படுத்தும் குச்சி, புல் போன்ற பொருட்களை கொண்டு வந்து போட்டால் அந்த வீட்டில் பெண் குழந்தை பிறக்கும்.
* ஈரமான மண், நெல், பூக்கள், காய்கனிகள், தானிய வகைகள் ஆகியவற்றை கொண்டு வந்து ஒரு வீட்டில் போட்டால் அந்தந்த பொருட்களின் வகையில் இலாபம் ஏற்படும்.
* நம்முடைய வீட்டில் இருக்கும் பாத்திரங்கள் எதையாவது காகங்கள் எடுத்துச் செல்வது நமக்கு தீமையை அளிக்கும்.
* காகங்கள் மிகவும் அமைதியாக கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து கரைந்து கொண்டிருந்தால் அரசு ஆதரவு, நண்பர்கள் சேர்க்கை, நல்ல உணவு, தங்கத்தால் இலாபம் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
* காகங்கள் சூரியனை பார்த்து கரைந்து கொண்டிருந்தாலும் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள பூக்கள், அல்லது பொருட்களை கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும் அந்த வீட்டில் நெருப்பினால் தீமை ஏற்படும்.
* பால் உள்ள மரங்களின் மீதும் ஆற்றங்கரைகளில் இருந்தும் மழை காலங்களில் காகம் கரைந்தால் மழை பெய்யும். மற்ற சாதாரணமான நாட்களில் அவ்வாறு கரைந்தால் மழை மேகங்கள் மட்டுமே வரும்.
* நீர் நிலைகளை பார்த்து காகங்கள் கரையும். அதே போல காகங்கள் நீரினுள் தலையை முழ்கச் செய்யும். மணல் புழுதி போன்றவற்றிலும் தலையை மூழ்கச் செய்யும். அவ்வாறு மழை காலங்களில் செய்வது நல்ல மழையை பெய்ய வைக்கும். அதுவே மற்ற நாட்களில் செய்தால் அது தீமையை அளிக்கும்.